தினந்தோறும்

அவளது ஆசைகள் என்று 
எனக்குள் எழும் 
மூட நம்பிக்கை 
பேருந்தின் முன் சென்றால் 
என்னை பேருந்தில் முன்புறம் 
ஏற சொல்கிறாள் என்றும்
பின்புறம் சென்றால் 
என்னை பேருந்தில் பின்புறம் 
ஏற சொல்கிறாள் என்றும்
மனதில் நினைத்து கொள்வேன் 
அவள் என்னை கவனித்தால்
 புரிந்து கொள்வாள் 
எப்படியோ எப்படியாவது
 அவளை நான் பார்க்க வேண்டும் 
மனதில் ஏற்படும் வருத்தங்கள்
 அன்றைய தினம்  
என்னை வாழவிடாது



கருத்துரையிடுக

0 கருத்துகள்