உன் பெயரே கீதமடி

 மனதில் தோன்றும் எண்ணங்களின் 

பல வகைகளில்

மனதின் பிரதிபலிப்பு 

அவள் முகம் காட்டுவது எதிர்ப்பா

எதிர்பார்ப்போ

மகிழ்ச்சியூட்டும் நினைவுகள் 

ஆளும் மனதை வருத்தி கொண்டு 

அவளும் வருந்திகிறாள் 

என்னையும் வருத்திகிறாள் 

நினைவில் உள்ளதை சொன்னால் 

ஏற்று கொள்கிறன் 

விருப்பமாயிருந்தால் நினைவில் 

காதலியை நிறுத்தி கொள்கிறேன் 

விருப்பமில்லாவிட்டால் நினைவில் 

காதலையை நிறுத்தி கொள்கிறேன் 

அன்பின் அடையாளமாய் 

அதில் உள்ள நினைவுகளை

அவள் ஓர பார்வையில் 

ஒளிந்த மர்மம்

எதையும் தாங்குவாள் என்று 

என்னையே இழப்பேன் 

என்று 

இதுவரை இருந்ததில்லை 

இன்று இழந்து கொண்டிருக்கிறேன் 

என் இதயத்தை

இப்படியே இருக்கலாமா 

இன்று போல் 

என்றும் மாறலாமா 

இப்படியே இருக்கிறேன் 

இன்றைய காதல் 

நாளைய தகவலாய் 

எங்கும் இருக்கலாம்

காத்திருப்பேன் உனக்காக 

காத்திரு எனக்காக

எண்ணத்தில் என்னை வைத்து 

என்னத்த எங்கே வைக்க வைத்தாய் 

வாழ்ந்திவிடு என்று 

என்னை 

வாழவிடு 

குரல்கள் கேட்கவில்லை 

கூப்பிடது நீயா 

என்னை பார்த்து சிரிக்கும் 

நிமிடங்கள் நினைவுகளை 

வருடங்களாக்காதே

நினைத்து விட்டேன் 

உன்னை 

விரும்புகிறேன் உன்னை 

பார்வையில் 

தோற்றங்கள் இளமையானாலும் 

உனது தோழி வெளிர் 

நிறமானாலும் 

காதலன் கண்ணுக்கு 

எதுவும் தெரியாதடி 

உன் 

காதலை தவிர எதுவும் 

தெரியாதடி 

அடுத்தவளின் குரலுக்காக 

நீ வருந்தாதடி 

நினைப்பதே பலமுறை

நிலைக்கட்டும் நம் 

தலைமுறை 

நினைவுகளை உண்மையாக்கும்

சகல பெண்ணில்லாமல் 

விருப்பங்களை அனுதினமும் 

நிறைவேற்றும் உயிர்தோழியடி

உயிர்பித்தன் உனக்காக 

உடலின் தேகங்களுக்காக

வருத்தபடாதே கவலைகொள்ளாதே


கூறிய நெஞ்சமும் குறை கொண்டே

 நெஞ்சமும் இழக்கின்ற காதலின் 

இருப்பிடம்

உன்னருகே இருப்பவனும் 

உன் மனதை புரிவனும் 

உனக்காக காத்திருப்பவனும் 

உண்மை காதலின் உறைவிடம் 


கூறும் முன்னே

 எதற்கும் 

யோசிக்கனும்

சேர்ந்த பின்பு

எதையும் 

எதிர்த்து ஜெயிக்கனும் 

காத்திருப்பது காதலுக்காக

வருகையே காதலிக்காக 

சொல்வதில் அவளுக்கு 

தயக்கம் 

நினப்பதால் உனக்கு என்ன மயக்கம் 

மாற்றத்தின் விளைவுகளை 

எதிர்பார்த்து எதிர்ப்புகளை

எதிர்நோக்கி 

வருகின்ற நினைவுகள்

நினைவலைகள் நீ

இருந்தால் என்ன 

இல்லையென்றால் என்ன

என் நினைவே நீதானடி

உன் பெயரே எனக்கு கீதமடி 






கருத்துரையிடுக

0 கருத்துகள்