சொன்னால் வருவேன் உன்னருகே

 அவளிடம் இருந்து 

தகவல் வரவில்லை 

என்றவுடனே 

நான் அறிந்து கொண்டேன் 

அவள் வரமாட்டாள் என்று 

நின்று என்னிடம் பேச 

வேண்டும் என்ற ஆசை 

அவளிடம் இருக்கும் 

என்று எதிர்பார்த்தே

பாதி நாட்கள் அவளருகே

செல்வேன் அவளுக்காக

அவளின் மனழுத்தம்

பெண்மை தன்மை என்ன

என்பதை என்னாலும் உணரும் தருவாயிலும் 

என்றால் அவள் எந்நேரத்தையும் 

இழப்பாள் எனக்காக 

மறுமுனை எதிர்ப்பவர்கள்  இருந்தாலும்

நானிருக்கும் தைரியமே 

அவள் எதையும் செய்ய துணிவாள் 

அவளிடம் எனக்கு பிடித்தது

பேருந்தின் முற்பகுதியில் ஏறுவது 

காதல் கண்கள் 

எங்கும் அசராத பார்வை

புலனுக்கேற்ற பேச்சு 

எதையும் செய்யும் தைரியம் 

காதலை புரிந்து கொள்ளக்கூடிய

மன பக்குவம் 

எப்படியும்

 என் செய்கைகளை 

கணடறிவது

எதிலும் அக்கரையை 

காட்டுவது 

நான் பயன்படுத்தும் 

பொருட்களை கவனிப்பது

தேவையில்லாத சிந்தனைகளை தவிர்ப்பது

தேவையான சிந்தனைகளை வளர்ப்பது

என்னை புரிந்து கொள்வது

மாற்றங்களுக்காக காத்திருப்பது

பிடித்தவைகளை காதிற்படும்படி கூறுவது

நானருகே வந்தால் கூச்சபடும்படி நடிப்பது 

நான் பார்த்தால் குறுஞ்செய்திகளை படிப்பது போன்று நடிப்பது

என்றும் பார்க்க முடியுமா 

இல்லை 

என்றாவது தான் பார்க்க முடியுமா 

உன்னில் உள்ள காதல்

என்னில் உள்ள காதல் 

நம்மில் உள்ள காதலாய் 

எப்பொழுது மாறும் 

மௌனம் உனது அடையாளம் 

என்றால் 

பேசுபவர்களின் பதில் கூற

முடியும் போது உன்னால் மௌனத்தை தேட முடியுமா 

ஆசைகளின் உணர்வுகள் 

வெளிபடுத்த மீறியவள் நீ

எதையும் ஏற்று கொள்பவன் நான் 

முறையோடு வாழலாம் 

முறையாக தேடலாம் 

உன்னிடம் குறையென்று பார்த்ததில்லை

நான் எதிர்பார்த்ததும் இல்லை

அடைக்கலமாய் வருகின்றேன் 

உன் அன்பானவாய் மாறுகின்றேன் 

வேண்டியதை கொடுப்பேன் 

நினைவுகளை நானே கெடுப்பேன் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்