காதல் என்ற வார்த்தையை

காதல் என்ற வார்த்தையை 
கட்டி போட்ட சமுதாயத்திற்கு
தெரியுமா.... . 
அவள் நினைவுகளை 
கட்டி போட முடியாதென்று......


வாழ்ந்த வாழ்க்கை என்ன
சுகமென்று அறியாத சுய
நல ஜீவன்களுக்கு 
தெரியுமா. .. . . ... . ......
எப்படியும் இந்த மனம் 
எங்கிருந்தாலும் வாழ்க 
என்று வாழ்த்தும்நெஞ்சமென்று. .... .....


நிலைமைகள் நினைவுகளாய்
மாற்றும் இனிய இரவுகளில் 
தொடும் போதும் படும் போதும் 
ஒவ்வொன்றிலும் அவள் 
நினைவுகள் தான் என்று. ...... ...... .. ........


பார்ப்பதில் பேசுவதில் சிரிப்பதில் 
வேகம் காட்டாத வாழ்க்கை 
பிரிப்பதில் காட்டியது  என்ன வேகத்தில் 
பிரிவுகள் உறவுகள் கலக்கம் தந்தும் 
என்னிதயத்தில் நீங்கா இடம் பெற்றவள்
என்னியவளே. ........... 

மௌனத்தை கலைத்த இதழ்கள் 
நடுவீதி நடுங்கவுமில்ல பதறவமில்ல 
பார்த்த விடலைகள் விதியின்
நிலைகள் தடுமாறியது தடம் மாறவில்லை 
நேசித்தால் சொல்லி விடு 
நான் உன்னை நேசிக்கிறேன் என்று 
தோழியிடம் சொல்லி விடு 
பிரியா நினைவுகளுடன் 
இன்று வரை ................



கருத்துரையிடுக

0 கருத்துகள்