பிறப்பின் போது பிரிந்தும்
பிறப்பால் எந்த ஒற்றுமையில்லாமலும்
ரத்தம் சம்பந்தமில்லாமலும்
சாதி மதங்கள் பொருளாதாரம் நம்மை பிரித்தாலும்
பள்ளி பருவங்கள் கல்லூரி பருவங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பருவங்கள்
சின்ன சின்ன சண்டை
பெரிய சமாதானம்
பள்ளி தட்டில் இருந்து பாட்டில் வரை பகிரும் மனம்
தெரிந்து செய்த தவறுகள்
தெரியாமல் செய்த தவறுகள்
சங்கடவாதியாக
சந்தர்ப்ப வாதியாக
சூழ்நிலை வாதியாக
ஏமாற்றங்கள்
எதிர்ப்புகள்
அனைத்துயும் சகிக்க வைத்த சகிப்புத்தன்மையோடு
போட்டி
பொறாமைகள்
எந்த நிலைமை வந்தாலும்
வந்த நிலைமை மாறாத
புகைபடங்கள்
மறந்த காதல்கள்
மறைந்த காதல்கள்
வாழ்ந்த காதல்கள்
பழைய நினைவுகளை
கனவுகளை
நினைவூட்டும் நண்பர்களுக்கும்
ஏற்று கொண்ட
நண்பர்களுக்கு ம்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்



0 கருத்துகள்