வலைபயல நினைச்சுட்டா

 இதுவரை இல்லாத 

இன்பம் 

அவளை பார்க்கும் போது 

காதல் காமம் இரண்டுமில்லை

ஆனால் மனம் 

அவளை தேடுகிறது ..... ..... . ... 

பார்க்க பார்த்த நிமிடங்களை விட

பாராமல் இருக்கின்ற நேரங்களில்

நேசம் புதியமானதால் 

பாசம் நம்மை உயர்ந்தவர்கள் மீது

வரும் போது ஏற்று கொள்ள 

கூடியவர்களா 

மறுப்பார்களா 

பின்புறம் திரும்பி பார்த்தால் 

என்ன என்று 

மனம் கேட்டாலும் 

தடுமாறவில்லை

அவளை பார்ப்பதற்கு 

அழகினுடைய பிறப்பெடுத்து

கடாட்சம் நிறைந்த மேனியோடு

கட்டும் இளமையோடு

மனதில் காதலோடு

பரிதி உதித்த

கண்கள் சந்தித்து 

காதல் பதித்து

பார்த்தால் சிரித்து

பேசாமல் அழுது

பிரிவால்

காதலையே நினைத்து 

பொழுது காண்பாள் 

உற்றார் நோக்கின் 

சுற்றார் விரும்பின் 

கன்னி மெய் நோக்கின் 

கள்வன் தான் 

இடையினருகே அவளது பார்வை 

பட்டால் மன்னன் என்ன

கள்வன் ஆக இருந்தாலும் 

காதல் வயபடுவான் 

வயநாட்டை தொடர்ந்த சரிவு

இமயம் வரை தொடர்ந்தாலும்

உப்பிட்ட பண்டம் கொடுப்பாள் 

சற்றும் யோசிக்காமல் கை தொட்டு 

முகத்தை நோக்கிய கள்வனே காதலனாவான்

கருமையிட்டு புருவங்களை 

உயர்த்தி திருத்தினாலும் 

கள்ளச்சி மறைச்சிட்டா 

வலைபயல நினைச்சுட்டா


கருத்துரையிடுக

0 கருத்துகள்