கண்ணில் புலப்படாமல்

கண்ணில் புலப்படாமல் 

காதல் தந்து 

நினைவுகளை தடுமாற்றாமல் 

நினைவலைகளில் மட்டும் 

என்னை நேசிக்கும்

அவளுக்கு தெரியாது 

என்றுமிலா 
இந்த பிரிவின் காதல் 

எவ்வளவு உண்மையானது 
என்று ....

அவளது மேனி கண்டதோர் 
பளிச்சென்று நிறமிருந்தும் 
தேம்பி அழுவெதல்லாம்
கணவனின் நினைவுகளாலே

கைபடாத நினைவுகள் 
பேசபடாத நிமிடங்கள் 
நினைக்கின்ற நிமிடத்தில் 
அவளது சிரிப்பே

என்னில் சொல்லும் இதயம் 
சொல்லும் வார்த்தைகள் 
இதழ்கள் சொன்னால் கவிதையா 
வார்த்தையை தவிர 

வாழும் வாழ்க்கை கிடைக்க
அவளது மனம் ஆசைபடும் 
நேரத்தில் நேர்த்திக்கு 
விடைகொடுப்பாள் இந்நாளை

பார்க்காத கண்ணிரெண்டும் 
பேசாத நாவொன்றையும் 
உணர்ந்த ஜீவனுக்கு தெரியும் 
படைத்த இதயம் ஒன்று 
அதில் இணைந்து வாழும்  உயிரெண்டு

பார்க்க பேச துடிப்பதில் வேகந்தான் 
இதயத்திற்கும் இதழ்கள் மட்டுமே ................
என்ன பொறுமை 
உன்னுடன்
 வாழ்வதற்காகவா.........
 இழப்பதற்காகவா..................
 காலம் கனிய சொல்லுமிளமைக்கு 
காதல் இன்ப தெரியுமா .......................
அவளது குரலை கேட்டு 
ரசிப்பதில் என்ன ஆனந்தமென்று ......................

கருத்துரையிடுக

0 கருத்துகள்