இதயம்

கனவில் கண்டவளை

நேரில் பார்த்து 

கண்களில் பேசி

இதயத்தில் இணைந்து

பிரியும் நேரத்தில் 

பார்வை இழந்து

மதி கெட்டு 

அவளிடம் மனம் விட்டு

பேச முடியாத நிமிடங்களில் 

அவளை நினைந்து

நினைந்து  சுய நினைவை 

இழந்து இருப்பதில் அவளுக்கு 

கொஞ்சம் எனக்கு கொஞ்சம் 

பகிர்ந்து 

மனதில் தோன்றும் எண்ணங்களை

அவள் சொல்ல 

அடுத்தவர்கள் மூலம் 

எனது செவிக்கு கேட்க

அவளது குரலில் 

இனிமை பொருந்தி 

இளமை ததும்பும்

 உணர்ச்சி மிக்க

 பாடலகளை உணர்வேன் 

அவளுக்காக என்று 

அவள் பேசினாலே 

கவனமில்லாத நினைவுகள் 

கற்பனைகளை ஊட்டும் 

அவளது பார்வை

எங்கும்

 நடனமாடாத பார்வை 

முயற்சி செய்தேன்

 அவளை பார்ப்பதற்கு 

முடியவில்லை என்றால் இறங்கிவிடுவேன் 

பார்த்ததும் சொல்ல

 துடிக்கும் மனசு

அவளுக்கு 

திரும்பி பார்த்தால் என்ன 

என்னை தேடி 

பார்த்த பின்பு 

இல்லையென்றால் 

கண்ணீர் விடாதே

அதை 

உன் இதயம்

தாங்கும் 

என் 

இதயம் தாங்காது








கருத்துரையிடுக

0 கருத்துகள்