தினசரி கடிதத்தோடு காக்க வைத்தாய்

 கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தாள் 

அப்படியும் இருந்து ஒரு குரல்

கேட்டது 

அவன் பாக்கிறானா என்று

கோபத்தோடு இறங்கினாலும் 

இதழ்கள் பொய் சொன்னாலும் 

விழிகள் மெய் சொல்கிறது

நான் நம்புவது 

பொய் சொல்லும் இதழ்களை அல்ல 

மெய் சொல்லும் விழிகளை தான்

விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு

இதழ்கள் சொன்னதை நினைப்பேன் 

நினைப்போடு 

நீ 

வந்தாய் 

உன் நினைவோடு நானும் வந்தேன் 

கண்கள் சந்தித்தது

இதயம் மாறியது

காதல் வந்தது 

கொஞ்சம் கோபம் தான் 

கொடுத்து விட்டேன் இதயத்தை

பொறுத்து கொண்டேன் 

இவை அனைத்தையும் 

நீ உரசி சென்றது

என் உடலை மட்டுமல்ல

என் 

இதயத்தையும் தான் 

குரல்களை கேட்டு ரசிப்பேன்

உன்னை காணதா போது 

விரைவில் 

உன் ஆசை படியே 

நீயே சொல்லிவிடு 

தினசரி கடிதத்தோடு 

காக்க வைத்தாய் 

என் 

நினவை எங்கே வைத்தாய் 



கருத்துரையிடுக

0 கருத்துகள்