என்னடா சொன்னான் நான் உன்கிட்ட ஒன்னு சொல்வேன் அதை யாரிட்டேயும் சொல்ல கூடாது

என்னையே அறியாமல் மாற்றங்களை சந்தித்து இருக்கிறேன். 
சோகமாய் இருக்கும் போது சோகம்,கோபம்,காமம்,காதல்,பிரிவு, மகிழ்ச்சி நினைவுகள் அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. 
அவளும் உணர்ந்திருக்கிறாள் என்பதை உணர முடிகிறது. 

எதுவும் அவளை பற்றி எனக்கு தெரியாது
தேடும் போது அவளது உணர்வுகள் சின்ன சின்ன சந்தோஷங்களை கொடுக்கும்

அவளை 
காதலியாக
மனைவியாக
இல்லை
மகிழ்ச்சியாகவே
என்னால் பார்க்க முடிகிறது 


கொஞ்சம் கொஞ்சமாக 
அவளை பற்றி 
தேடுவதை 
வேலையாக 
வைத்துள்ளேன் 

இமைகள் உயர்ந்ததில்லை
உருவங்களை மறந்ததில்லை
அவள் கண்கள் என்னிடம் 
சொன்னது காதலா
கவிதை வரிகள் நமக்கு வராது
கதை வரிகளோடு குறைத்து கொள்கிறேன். 
இதயத்தில் உதயமான கற்பனைகள்
ஒரு நாள் அவளை சென்றடையும் போது உணருவாள்
கண்கள் இரண்டும் கலந்த நிமிடங்கள் 
என்னோடு நானில்லை அவளோடு சேர்ந்தேன் என்பதை உணர முடிகிறது. பிடிவாத குணம் இருந்ததில்லை அவளை 
பார்த்த பின்புதான் வந்தது என்பதை உணர முடிகிறது. 

பேசுவது என்பது எனக்கு எளிமை அவளிடம் மட்டும் அது கடினமானது எப்படி எனக்கு தெரியவில்லை 
உறவு முறைகள் எதிரிகளாக்கப்படும் போதும் உணர முடிகிறது அவள் என்னை சந்தோஷபடுத்தியும்,மகிழ  வைத்துவிடுவாள் என்று 

நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லாத காரணந்தான் என்ன

தினசரி சந்திக்காத வேதனையும் அன்று நான் சந்திக்க கூடிய சவால்களும் எனக்கு மட்டும் தான் தெரியும் .
அவளது கிடைத்ததா இல்லை எல்லாம் நடிப்பா என்பது அவளுக்கு மட்டும் தான் தெரிந்தது. 

அனைத்தயும் ரகசியமாகவே வைத்து கொள்கிறாள்

அவளைபற்றி நான் யாரிடம் இதுவரை விசாரித்தில்லை 

தேடியது தேடாமல் இருப்பது 
பார்ப்போம் 
பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டால்
என்று 



கருத்துரையிடுக

0 கருத்துகள்