"நேற்று காணாத வேதனை"
நேற்று உன்னை காணவில்லை என் கண்களில்,
அந்த தருணம் ஓர் ஆயிரம் ஆண்டாய் போனது மனதில்.
ஒவ்வொரு நொடியும் உன் நினைவின் நிழலில்,
அமைதியாய் உருகினேன் உன் முகச் சாயலில்.
பாதியில் நிற்கும் பூங்காற்று கூட,
உன் வாசமின்றி என்னை எதற்கு தேட?
பறவைகள் பாடிய சுருதி கூட,
உன் குரலின்றி வெறுமை போலே தோன்றியது.
மழைத்துளி வந்து ஜன்னல் தட்டியது,
அது கூட உன் விரல் போல கசக்கி சென்றது.
நிலா வானத்தில் வெட்கம் கொண்டது,
"அவள் சிரிப்பு எங்கே?" என்று தேடித் திரிந்தது.
நேற்று உன் பார்வை இல்லாமல் இரவு இருண்டது,
கனவு கூட உன் முகம் தேடி வாடியது.
என் இதயம் தான் சொல்லிக் கொண்டது,
"நாளை அவள் வருவாள்" என்ற நம்பிக்கை மட்டுமே வாழ்ந்தது.
உன்னை காணாத ஒரு நாள்,
நூறு வருடங்கள் போல நீள்கிறது காதல் வாழ்வில்.
உன் சிரிப்பு தான் என் உயிரின் இசை,
உன் வருகையே என் வாழ்வின் புது விடியல் அழகு.
மணி–அனுபிரியா காதல்



0 கருத்துகள்