பேசுவதற்கு நினைவுகள்
பரிட்சுக்கும்
அந்த புனித ஆன்மாவை
எங்கே தொலைத்தேன் என்று
தேடும்போது அந்த விழிகள்
சொல்லும்
அவளிடம் என்று.....
பேசுவதற்கு வார்த்தைகள்
வாய்ப்புகள்
இருந்தும் தவிக்கும் போது
அமையாத நேரங்கள்
மனமிடையே ஏற்படும்
தகவல் மாற்றம்
தனியே புலம்பி தவிக்கும்
மாற்றம் தந்து
என் நினைவுகளை
வருடும் அவளது காதலுக்கு
தெரியாதா நானும் உன்
காதலுக்காக காத்திருக்கிறேன் என்று
காதல் கெடுக்கும் பசியை
அதே காதல்
கொடுக்கும் பசியை
இளமை தவிப்புகள் கொஞ்சம்
காலங்கடக்கட்டும் அதை நினைத்து
வரும் நினைவுகள் நமக்கு ஒரு
ஆனந்தம் மகிழ்ச்சி
அதை கேட்பவர்களின் மனதில்
நெகிழ்ச்சி
மனம் தடுமாறும் போது
ஒரு நிமிடம் தலைகுனியும்
அந்த அழகை.........
கூந்தலின் பேரழகை
எப்படி சொல்வேன்
மறைக்க முடியும்
தலைகுனிந்து முக அழகை
எப்படி மறைப்பாய்
தலைகுனிந்து கூந்தலின்
பேரழகை.............................



0 கருத்துகள்