உன்னிடம் எதிர்பார்க்கிறேன்

 ஆயிரம் பேர் 

என்னருகே இருந்தாலும் 

அனாதையாக உணரும் 

என் இதயத்திற்கு...........

அவளருகே இருக்கும் போது 

ஆயிர பந்த சந்தோஷம் ........

நினைப்பதாலோ 

பார்ப்பதாலோ

சிரிப்பதாலோ

எத்தனை முறை 

அவளது நினைவுகள்  

என்னுள் வந்தாலும்

அவளை பேரழகியாக 

வர்ணித்தாலும் 

அவள் பேசாமல் 

அமைதி காக்கும் 

நிமிடங்கள் 

மரணித்தே பிழைப்பேன் .........

மனமோடு இணைவாயா .......

மனமிட்டு பேசுவாயா .......

கவி யிட்ட உனக்கு 

காதல் திலகமிட்டு

முந்தினம் பார்ப்பதில் 

என்னடி வருத்தம் 

உன் முக அழகில் 

சிறிய திருத்தம் 

மாறியே இருந்தாலும் 

மனம் ஏற்று கொள்ளும் ..........


நீ  இல்லை யென்றால் 

மறு பிறவி எடுத்து கொள்ளும் ........

நம்மில் எழும் மாற்றங்கள் 

நம்மிடையே வாழ்வதற்கான

மாற்றங்கள் 

எதற்கும் அஞ்சும் மனம்.......

உன் மனம்  விரும்பினால் 

வாழ்வதற்கென்ன

பிடிக்கவில்லை என்றால் 

பிரிவதற்கென்ன

எதையும் நோக்கி வாழும் எனக்கு 

எதையும் நீக்கி வாழும் என்னிதயம் 

மாறும் என்று காலத்தை 

நம்பும் 

நம் இதயம்



மாறுவோம் என்று காதலையும் 

நம்பும் 

நம் இதயம் 


எந்த தருணங்களிலும் 

நம்மிடையே

மாறும் உருவங்கள் நிறங்கள் 

அனைத்தும் மாறினாலும் 

நம்மை சேர்த்து வைப்பது 

அந்த காதல் தான் ..........................

உன்னையும் என்னையும் 

சேர்த்து வைத்ததும் 

அந்த காதல் தான்...................... 

புரிந்தால் பிடித்தால் காதலிப்பேன் மணப்பேன் என்று சொல்லிவிடு

இல்லை மறுகணமே மறந்துவிடு 

மாற்றத்தை எதிர்பார்க்கிறேன் 

அதை உன்னிடம் இருந்தே எதிர் பார்க்கிறேன் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்