சுகவாசியா

 பார்க்க முடியாத

 போது தவிப்பதும் 

பார்த்தவுடன் 

வெட்க படுவதும் 

அதில் 

பெண்கள் அழகு 

என்னவள் பேரழகு 

அனைத்துயும் 

சொல்லி 

பழகுவாள் 

அவளது 

அன்பையும் 

ஆசையையும் 

தவிர 

இதயத்தில் 

நீ 

இருப்பதால்

 மறைக்க 

முடியவில்லை 

அவளது நினைவுகளை ..............

நிலைக்குமா 

நிலைக்காதா

புரியுமா 

புரியாதா 

என்று மறியாத 

மனதிற்கு

பிரியும் நேரத்தில் 

அவள் கொடுக்கும் 

மன திருப்தி 

அவளது புன்னகை......................

பிரிந்தால் 

மறந்து விடுவோம் 

என்று 

எண்ணிற்பால் போல் 

மறந்து விட வேண்டும் 

அவளது 

எண்ணங்களை ...................

ஆயிரங் கண்டாலும் 

அனைத்தும் கண்ணெதிரே 

வந்தாலும் 

நினைப்பதில்லை

 வேறொருத்தியை ....................

நிலைப்பதில்லை

 தினசரி 

உன்னை

 பார்ப்பதை..............

எதற்கு அச்சம் 

என்னை பார்ப்பதில் 

நினைப்பதில் இல்லா

அச்சம் 

பேசுவதில் என்ன அச்சம் 

மாற்றங் கொண்டவள் 

மாற்றினால் என்னை.............

பேச துடிக்கும்  போதும் 

வெட்க பட்டு 

தலை குனியும் 

போதும் 

மறந்தாளா 

அவளது 

முதல் நாள் பார்வையை...........

அன்று எங்கே

மறைத்து 

வைத்தாய் 

உன் 

வெட்கத்தை

ஆளில்லா 

நேரத்தில்

பார்க்கும் நீயென்ன

என் 

இதய திருடியா 

முகமறிந்து பழகு முன் 

அகமறிந்து 

பழகுபவளில் நீயும் 

ஒருத்தி 

புத்தாடையும் 

புதுப்பொலிவுடன் 

பார்த்து பழகியவளுக்கு 

மொத்த ஆடையும் 

காட்டி மகழ்வதென் 

ரகசியம் தான் 

என்ன

காத்திருக்காம

 இருந்தா

காதலிச்சியிருப்பாயா 

பாக்காமா இருந்தா 

தேடியிருப்பாயா

போனை மறைச்ச 

எடத்த சொல்லட்டுமா 

பேர் மாத்தி பேசுனத

சொல்லட்டுமா 

குத்தம் சொல்றதுக்கு

நான் சுத்தம் இல்லயடி

மொத்தமா உன்ன பத்தி 

சொல்றதுக்கு

நானும் ஒரு ஞானி இல்லையடி 

இளமையிலேயே 

நீ

புலமையா

நீ 

காதலிக்கிறது 

என்ன 

புதுமையா 

கண்டது கனவா 

இல்லை 

நினைவா

காக்க வச்ச 

மச்சானுக்கு

மல்லி 

பூக்க பொறுக்கலயா 

ஆசைபட்ட 

மச்சானுக்காக

வச்ச மருதாணி 

செவக்கலாயா

ஆசைபட்டவ 

கேட்டத வாங்கி தர

கல்லாபெட்டில 

மிச்சம் வக்கலயா

பொத்தி வச்ச 

கடுதாசியா

நீ என்ன

ஓய் அப்பனுக்கு

விசுவாசியா

நான் என்ன 

சுகவாசியா?






கருத்துரையிடுக

0 கருத்துகள்