தினமும்
யார் முகத்தை பார்த்தாலும்
ஏமாந்து போகிறேன்
அவள் முகமென்று
அவளை பார்த்தாலும்
சற்றே
யோசிக்கிறேன் அவளா
என்று
கூறுவேன் என்று சொன்னவறள்
ஏதேனும் குறை கண்டாளா?
காதலிக்க நேரமில்லையா ?
பிரிந்தால் புரியும்
என்னை விட்டு
பிரியும் போது புரியும்
நான் யாரென்று தெரியும்
கண்ணாடிகளில் பிம்பமாய்
தேடும் உனக்கு என்
பிம்பம்
கிடைப்பது தலைகீழ் பிம்பம் தான்
உன் மௌனத்தின் மாற்றம்
தெரியுமா?இல்லையா?
எனக்கென ஏமாற்றமா ?
சுவாசங்களில் மணக்கும்படி
என்னை உரசி செல்லும்
உன்னிடம்
வாசம் செய்வது காதலா காமமா
சிவக்கும் மருதாணியில்
உணர்வது காதலா காமமா
எல்லையற்ற துன்பத்தையும்
எண்ணற்ற தேகத்தையும்
உணருகிறேன்
உன்னை
காணாத நாட்களில்



0 கருத்துகள்