அவள் வந்தாளா என்று
நானும் பாக்க
நான் வந்தேனா என்று
அவளும் பாக்க
தொடர்கின்றது தினசரி
தேடல்
அடையாளத்தை காட்டினால்
அங்குமிங்கும் அலை
பாயாத பார்வை
பார்த்து கொண்டே இருப்பதும்
கொஞ்ம் சந்தோஷம்
கொஞ்சம் மகிழ்ச்சி
பார்த்து கொண்டே வரும் புன்னகை
பெயரை கேட்க நினைப்பதும்
பெயரை கேட்க துடிப்பதும்
ஒரே நேரத்தில் திரும்புவதும்
உன்னருகே நானிருந்தும்
பேசாமல் இருப்பதும்
அவள்
இதயத்திற்கு அகதியாக
அவள்
இதயத்திற்க ஆயுள் கைதியாக
இமைகளை மூட
இரவை எதிர்ப்பார்ப்பதும்
தினசரி எதையோ
மனதில் நினைத்து
அவள்
வருகையை எதிர்பார்ப்பதும்
இதழ்கள் காணும் அச்சம்
இதயத்தில் எப்பொழுதும் உச்சம்
இதழின் பயத்தையும்
கண்களின் தைரியத்தையும்
காண துடிக்க
தினந்தோறும்
செய்கின்றேன்
ஓர பார்வைக்காக
ஒருமணி நேர பயணம்
வினாடிகளை விரயமாக்கி
நிமிடங்களை நினைவகளாக்கும்
உன்னை காணாத நேரங்களில்
உன் பின்னே நானிருந்தும்
பேசாமல் இருப்பதனால்
பழகி கொண்டாய்
பார்ப்பதிலே நேரம் போனது
உன்னை நினைப்பதால்
நாட்களும் போனது
நினைத்த நிமிடங்கள்
உன்னிடமுள்ளதை ஒவ்வொன்றாக
கண்டுள்ளேன் கண்டு
கொண்டும் இருக்கிறேன்
காதலித்தவனக்கு கிடைப்பதில்
கொடுத்தால்



0 கருத்துகள்