உயிரிலே கலந்தது

 இடையிடையே கைபட

என் இதயம் கெட்டு போனதல்ல

என் நினைவோ உன்னை

விட்டு  போனதல்ல

காத்திருப்பேன் என்று 

உனக்கு தெரியும் 

காதலிக்கிறாய் என்று 

எனக்கு தெரியும் 

நினைவுகளால் என்னை கொல்லாதே

பேசிய என் மனதை வருடாதே

காத்திருப்பதும் எனக்கு

சுகம் தான் 

உன் கண்கள் என்னிடம் 

சரணடையும் போது

நீ மட்டும் வந்தால்

வழியில் மறித்து நிற்பேன் 

வேறொருவள் வந்தால் விலகி நிற்பேன் 

உன்னை காண வேண்டும் 

என்று கண்களை மூடினேன்

நீ வருவாய் என தேடினேன்

பார்த்தேன் ரசித்தேன் 

உறக்கமில்லாத இரவு

நீயில்லாமல் போனால் எனக்கேது உறவு

என்னை கடந்து செல்லும் போதும் 

என்னருகே நீ நடந்து போதும் 

காதல் குரல் கேட்கலேயே

கண்டேன் இன்று

நீ என் மீது 

காதல் கொண்டேன் என்று

உன் உள்ள கதவை திறந்து விடு

உனக்காக 

என் 

இல்ல கதவும் 

இதய கதவும் 

என்றுமே 

திறந்திருக்கும் 

பூவே உனக்காக 

காத்திரு காலையில் வருவேன் 

கொடுத்து விடு 

உன் இதயத்தை 

எடுத்துவிடாதே எனது உயிரை

உடல் உள்ளவரை உயிர் இருக்கும்

உயிர் உள்ளவரை உன் நினைவிருக்கும்


காதலின் ஆயுள் கைதி

பா. மணிவண்ணன் 

பொறியியல் பட்டதாரி 



கருத்துரையிடுக

0 கருத்துகள்