“இரண்டு காலம்… ஒரே காதல்
பள்ளியில் தொடங்கிய நட்பு
அவன் பெயர் கிருஷ்ணா.
அவள் பெயர் ராதா.
9th standard-ல் இருவரும் ஒரே class-ல் சேர்ந்தார்கள்.
ராதா முதல் பெஞ்சில் அமர்வாள்; கிருஷ்ணா கடைசி பெஞ்சில்—
ஆனா mid exams வந்தால் இருவரும் library-யில் பக்கத்திலேயே அமர்ந்து படிப்பார்கள்.
அந்த library silence-ல் தான் முதல் சிரிப்பு, முதல் teasing, முதல் eye contact.
ஒரு நாள்…
ராதா கணிதம் புரியாமல் சிரமப்பட, கிருஷ்ணா உதவி செய்தான்.
“இதை இப்படி simplify பண்ணு… ரொம்ப easy.”
அவள் கண்களில் நன்றி…
அவன் கண்களில் ஒரு புதுசா தோன்றும் உணர்வு.
அவனுக்கே தெரியாமல்,
அவன் ராதாவை பார்த்தால் மட்டும் இதயம் ஓட ஆரம்பித்தது.
பிரிவின் நாள்
10th முடிந்த பிறகு…
கிருஷ்ணா ஒரு வேறு நகரத்துக்கு மாற வேண்டியது.
ராதாவுக்கு சொல்ல முடியாமல் school last day-யில் அவன் அமைதியாக இருந்தான்.
மாலை bell அடிக்க,
ராதாவை மெதுவாக வந்து கேட்டாள்:
“கிரிஷ்… நீ ஏன் today full silent?”
அவன் ஒரு நிமிடம் திகைத்து,
“நான் நாளைக்கு வேற இடம் போகணும்… அங்குதான் 11th join பண்ணிடுவேன்…”
ராதா ஒரு நொடிக்கு freeze.
வேதனை மறைத்த சிரிப்பு.
“சரி… keep in touch okay?”
ஆனா…
உண்மை என்ன தெரியுமா?
அந்த வயசுல “keep in touch” என்பது
அடுத்த வருடம் மறைந்து போய்விடும் வார்த்தை.
அந்த இரவு இருவரும் மனசுக்குள் ஒரே ஒரு கேள்வி—
“இது பிரிவா… அல்லது தற்காலிக தூரமா?”
கல்லூரியில் மீண்டும் சந்திப்பு
நான்கு வருடங்கள் கழித்து…
கிருஷ்ணா Engineering college சேர்கிறான்.
First day, classroom-க்கு நுழைந்தபோது,
அவன் கண்கள் நின்றுபோனது.
அதுவே ராதா.
அதே சிரிப்பு.
அதே கண்கள்.
அதே calm look.
ராதாவும் அவனைப் பார்த்தவுடனே
ஓராயிரம் நினைவுகள் முகத்தில் மலர்ந்தது.
“கிரிஷ் ஆ? நீங்க இங்க?”
“ஆம்…Lucky-aa இருக்கேன்னு நினைக்கிறேன்…”
அந்த ஒரு வரியில் கூட அவன் தன் உணர்வை மறைக்க முடியவில்லை.
கல்லூரி காதல் மெதுவாக முதலிரு
Group studies…
Canteen coffee…
Evening bus stop walk…
Late night assignment calls…
அனைத்திலும் இருவரும் ஒருவரின் உலகமாக மாறிவிட்டார்கள்.
ராதா ஒரு நாள் சொல்லினாள்:
“School-ல நம்ம friendship miss ஆயிடுச்சு.
This time… I won't lose you.”
கிருஷ்ணா அந்த வார்த்தையை மனசில கொஞ்சம் ஆழமா எடுத்துக்கொண்டான்.
உணர்ச்சி பொங்கிய வெளிப்பாடு
Third semester.
College cultural night.
Raadhaa stage-ல song பாட, கிருஷ்ணா crowd-ல இருந்து அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
அவள் பாடிய last line:
“ஏன் உன்னை பார்த்தாலே இதயம் தாளம் கொடுக்கும்?”
பாட்டு முடிந்து backstage-க்கு வந்தபோது,
கிரிஷ் தைரியத்தோடு சொன்னான்:
“Because… that line is for me.
ராதா … I love you.”
அவள் ஒரு மூச்சு பிடித்தாள்…
ஒரு நிமிடம் அவன் முகத்தைப் பார்த்தாள்…
பின்னர் மெதுவாகக் கையை பிடித்து சொன்னாள்:
“Late-aa சொன்னாலும்…
நான் இதையே நீங்க சொல்வதுக்காகவே waiting.”
காதலில் கல்லூரி வாழ்வு
Love + Studies நான் எப்போதும் ஒரு perfect combo அல்ல,
ஆனா இவர்களுக்காக அது ஒரு beautiful journey.
Exam tension-லும்,
Project deadline-லும்,
Rain walk-லும்,
Canteen parotta-லும்—
அந்த காதல் தினமும் வளர்ந்தது.
Graduation நாள்
Convocation day.
Caps-ஐ வானத்தில் எறிந்து விட்டு
இருவரும் மூச்சு இழுத்துக் கொண்டனர்.
“School-ல் பிரிந்தோம்…
College-ல் மீண்டும் சேர்ந்தோம்…
இப்போ Life-ல பிரியாம இருக்கணும், ராதா.”
அவள் மெதுவாகச் சொன்னாள்:
“இப்போ தான் நம்ம actual காதல் ஆரம்பிக்குது கிரிஷ்…”…
தொடரும்....



0 கருத்துகள்