பேசுவதற்கு வார்த்தைகளே
இல்லாத போதும்
கிடைக்கின்ற தருணத்தில்
எழும் வினாவிற்கு
அவளிடம் விடை தேடும்
காலங்களும்
சுகமானது தான்
இடைவிடாத நிர்பந்தம்
காட்சிகள் திரையானல்
சாட்சிகளே
இல்லாமல் ஆட்சி செய்திடுவேன்
அவள் மனதில்
நேரம் கேட்பது
நேரில் கேட்பது
எல்லாம் அவள் குணமென்றால்
மூன்றாம் பிறை நெற்றி
அழைக்கும் மனம்
அழைக்காதா அவள் இதழ்கள்
காட்டிக்கொடுக்கிறது
கண்கள்......



0 கருத்துகள்