கருப்பு சிவப்பு கண்களரியும்

கருப்பு சிவப்பு கண்களரியும் நிலைகண்ட 
காதற் நிலையில்லா தன்மை உணர்த்தும் 
நிலைத்த தன்மையுணர்த்த காதற் மனதிற் 
தோன்றி இடைவிடாது தொடரும் 

தோன்றல் நிலைகண்ட பிரிவிற் கண்ட மனம் 
கலங்கி வாழ்வதால் பயனில்லா நேரங்கண்டு 
பேசும் காதலர் எண்ணங்கொண்டு சேரும் 
சேர்க்கை காலத்திற்கும் பயக்கும் 

சூரியநாளில் காட்சி கண்டு எதிர்பார்க்காத நாளன்று 
கொண்ட கொள்கையில் உறுதியடைந்த நெஞ்சத்திற்கு 
எண்ணல் தோன்றவில்லை எண்ணிய நெஞ்சம் அவள் 
தோன்றியாதால் காதல் என்றானது 

பார்க்க கூடாதென்றயண்ணமில்லை பார்ப்பதால் விலக 
முடியாத நிலையை கண்டு அவள் மனம் தாங்கமுடியா 
என்ற கட்சியைகண்டு தோன்றலின் நிலையை அவளுக்கு 
உண்டாக்க வேண்டாம் என்றே 

சுக்ரநாளன்றுவந்த கனவிற்காணாத காதலர் கண்ணீரென்டும் 
மார்போடுமார்பு இடித்துவந்ததா என்றநினைவுக்கு காமமல்ல
காதற்என்றான் கட்டிய சுவரைகாட்டி கட்டுவது நான்கேட்டற்கு
முத்தத்தோடு முடித்தான் கனவிற்கலைத்தான் 

கனவிற்கான காதலர்கள் இருவரையும் இறுதிநேர பேருந்தில் 
கனவிற் கண்டதோர் வருகை தந்த அவள் உண்டாக்கிய கோபம் 
போகும்போது காணும் அழகின்ல் கண்டதோர் நொடி பொழுது 
சொல்லாமற்சென்றாலும் புன்னகத்தான் அவள்சென்றபோது 



கருத்துரையிடுக

0 கருத்துகள்