காதல் என்னும் பட்டாம் பூச்சி


  ஓசைகள் இல்லாத நிசப்தத்தில்

 கூடகாதல் என்ற சப்தம் தான்!

வாய் மட்டும் சொல்லாமல் என் மனதோடு

நான் சொல்லிப்பழகியது

காதல் நீ!

காமம்  நீ!

மூன்றெழுத்து மந்திரத்தில் மூவுலகையும்

அடக்கிவிட்டாய்!


ஆசைகளை அழித்தொழித்து...

இம்சைகளை இட்டெரித்து...

துன்பங்களை இன்பமாக்கி...

துயரங்களை புஷ்பமாக்கி...


மூன்றாம் பிறையை நிலா என நினைத்தேன்

ஆனால் அது என்னவள் நெற்றி என்றது...

புருவமோ நான் வில் என்றது...

அவள் கண்கள் நான் அம்பு என்றது...

நான் வில் அம்பு குத்திய சிறு குருவியாக இருந்தேன்

என்னவளே! என்னவளே!

என் இதயத்தில் நீ இருந்ததால்

உன் வில் அம்பு பார்வையில்...

நான் குத்தி கிழியாமல் பிழைத்தேன்....


உன்னால் உன்னால் காயப்படுகிறேன்

என தெரிந்தும் கூட

உன்னையே சுற்றும்

என் மனதிற்கு நான்

எப்படி புரிய வைப்பேன்

நான் உனக்கு தொல்லையென்று.........


கருத்துரையிடுக

0 கருத்துகள்