கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்
கொஞ்சம் அவளின் ரசனை
அவள் கொஞ்சும் அளவற்கு
சின்ன யோசனை
எதையோ இழந்து
தேடியும் பரிதவிக்கும்
இதயம்
நான் தேடி சிக்கிய நாளும்
அவள் தேடி சிக்கிய நாளும்
காலையில் எழுந்து ராசிபலனை
பார்ப்பது
கண்டவுடன் காதலை மறைப்பது
வேற யாரையும் பார்த்தால் பரிதவிப்பது
சந்து இடைவெளியில் சிக்கி தவிப்பது
எனக்கு பசி என்றால்
அவள் பசியால் வயிற்றை பிடிப்பது
கண்டு கொள்ளாதபோது
படியே விட்டு இறங்கி போகாமல் இருப்பதும்
பார்த்து தேடும் பொது தென்படாமல் இருக்கும் பொது தவிப்பதும்
கண்டுபிடித்தவுடன் நடிப்பதும்
பொருத்தமான உடைகளை
தேர்ந்தெடுப்பதும்
பாடிகட்டாக ஆட்களை வைத்திருப்பதும்
கோபங்களை உண்டாக்க வைப்பதும
கோபத்தை நீயே தணிய வைப்பதும்
இதை தினந்தோறும்
ரசிக்கும்
உன் ரசிகனாய்
வளரும்
காதல்
எனக்கு சுகமானது
திரும்ப பார்க்காதே
திரும்பி திரும்பி
பார்க்காதே
இதழ்களை இணைத்து
இணையத்தில் நீ கொடுத்த
முத்தங்கள்
இன்னும் சேராதா
என்னை
காதலிப்பது உன்னை
நீ வருவாய்
என்று
படிகட்டை பார்க்கும் போது
கொஞ்சம் நாள் ஐந்து நிமிடங்களில்
சந்தோஷம் படுத்தியது
இன்று அதே தான்
இதயத்தை ஒரே படுத்தியது
காதலுக்கு ஏது முகவரி
கவிதைக்கு ஏது ஒரு வரி
உளராதே
கடவுளிடம்
முறையிடாதே
முறையாக கொடுத்துவிடுவாய்
முத்தம் ஒன்று கொடுத்துவிடுவாய்
கையை தொட்டவுடன்
மறந்துவிட்டாயா
உன் மனத்தை சிதற விட்டாயா
கண்களால் காதல் சொல்லாதடி
காத்திருக்க என்னால் முடியாது
வரவில்லையென்றால் துக்கம்
வந்தால் தூக்கம்
எங்கே விட்டாய்
எதிலில் விட்டாய்
தூக்கத்தை தொலைத்தேன்
தூக்கத்தில் உன் பெயரை சொல்லி அழைத்தேன்
என்ன வேண்டும்
இலவச நிறமா
இந்த வரியை
புரிந்தவர்களுக்கு மட்டும் புரியும்
தேடுவது சுகந்தான்
அதையே நீ செய்யும் போது
இதழ்கள் இணைந்தால் கொடுத்துவிடு
பிரிந்தால் கொடுத்துவிடு
கண்கள் காட்டும் கடுதாசி
காதலுக்கு நான் விசுவாசி
நீ ஒரு சுகவாசி
பிடித்தால் வாசி
என்னை புரிந்தால் நேசி
நாம் எப்பொழுது சேரலாம் யோசி
கனவா
நினைவா
கண்டதெல்லாம்
உன்
கண்ணாடி ஓர
பயணத்தில்
கண்களால் கைது செய்யாதே
நான் உன் காதலின் ஆயுள் கைதி
தேடி அலைந்தான்
உன் ஜெர்சி நம்பரை
13
சொல்ல வந்தவளை தடுத்து
நிறுத்தியது நீயா
உன் காதலா
உன்னை காண காத்திருப்பது
எனக்கு சுகம் தான்
நீ வருவாய் என்றால்
நிமிடத்தை வருடமாக்கினாய் காணும் முன்னே
வருடத்தை நிமிடமாக்கின



0 கருத்துகள்